எஸ்.பி.வேலுமணி விவகாரத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் இடங்கள் 60-ஆக உயர்வு…!
எஸ்.பி.வேலுமணி விவகாரத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் இடங்கள் 60-ஆக உயர்வு.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து 6 நேரத்திற்கும் மேலாக வருமான பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில்,எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 55 இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் இடங்கள் 60-ஆக உயர்ந்துள்ளது. மேலும், எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எராளமான ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.