தமிழகத்தில் 1100-ஐ தாண்டியது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை.!
தமிழகத்தில் இன்று மட்டுமே 81 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1101 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதியதாக 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1937-ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக இன்று மட்டுமே 47 பேருக்கு கொரோனா உறுதியாகி, இதுவரை 570 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிறு மகிழ்ச்சி தரும் செய்தி என்னவென்றால், கொரோனா சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்புவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இன்று மட்டுமே 81 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1101 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 809 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.