ராயபுரத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7,881ஆக உயர்வு.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் நேற்று மட்டும் சென்னையில் ஒரே நாளில் 2167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்தது, மேலும் சென்னையில் இதுவரை 33,441 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும், 21,681 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.சென்னையில் 846 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7,881பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராயபுரத்தில் அதிகமானோருக்கு தொற்று உறுதியானாலும் அங்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,212 ஆக உள்ளது.
மேலும் அண்ணாநகரில் மொத்த பாதிப்பு 6,033 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தண்டையார்பேட்டை -6,539 பேர், தேனாம்பேட்டை- 6,095பேர், கோடம்பாக்கம்- 5,827 பேர், திருவிக நகர்- 4,666 பேர், வளசரவாக்கம்- 2,611பேர், திருவொற்றியூர்-2,520 பேர், அம்பத்தூர் -2324 பேர், அடையாறு – 3,445 பேர், மாதவரம்- 1,819பேர், பெருங்குடி-1,290 பேர், சோழிங்கநல்லூர்- 1,634பேர், ஆலந்தூர்-1,431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…