இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303-ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும்- நிதியமைச்சர்..!
இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை முதல் முறையாக காகிதமில்லாபட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது , முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ509.56 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 241.40 கோடி நிதிஉதவி தரப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு தமிழ்நாட்டில் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திறன் அரசுக்கு இருக்கிறது. 8 லட்சம் தடுப்பூசி போடுவதற்கான திறன் இருந்தும், ஒருநாளைக்கு 2.4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே வருகிறது என தெரிவித்தார்.
மேலும், இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும். ரூ.741 கோடியில் மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்யப்படும் என பழனிவேல் தியாகராஜன் கூறினார்.