அழைப்பு என்னுடைய கவனத்திற்கு வரவில்லை, வந்திருந்தால் நிர்வாகிகளை அனுப்பி வைத்திருப்பேன் என டிடிவி தினகரன் பேட்டி.
நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம், 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, கிராம மக்கள் போஸ்டர்களை ஒட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கையகப்படுத்திய நிலத்திற்கு சமமான இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பலகட்ட போராட்டத்தில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நெய்வேலி என்எஸ்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாமக சார்பில் இன்று கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்எல்சி விவகாரத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி போராட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
பாமக நடத்திய போராட்டத்திற்கான அழைப்பு என்னுடைய கவனத்திற்கு வரவில்லை, வந்திருந்தால் நிர்வாகிகளை அனுப்பி வைத்திருப்பேன் என்றார். தமிழ்நாட்டு மக்களை பாதிக்கின்ற விஷயம் இது. மேலும், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் ஈகோ பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…