அடுத்த ஆட்சி திமுகவுடையதுதான் – மு.க.ஸ்டாலின் பேச்சு

அடுத்த ஆட்சி திமுகவுடையதுதான் என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் – ஒன்றிய, நகர,பகுதி,பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நம்மை தாண்டி நம்மிடம் இரண்டு பலம் இருக்கிறது. ஒன்று அண்ணா, மற்றொன்று கலைஞர் .அவர்கள்தான் நம்மை உணர்வால், ரத்தத்தால் இயக்கி வருகின்றனர். அடுத்த ஆட்சி திமுகவுடையதுதான்.இந்த தேர்தலில் நாம் அடையவிருக்கிற வெற்றி என்பது நாம் முன்னர் ஐந்து முறை பெற்றுள்ள வெற்றிக்கு சமம்.மத்தியில் பாஜக ஆட்சியின் அதிகார பலம்,மாநிலத்தில் அதிமுக ஆட்சி அதன் பண பலம், இவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றாக வேண்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025