அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் – அண்ணாமலை
பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது என அண்ணாமலை பேட்டி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.