“நான் பாஜகவில் இணையப் போவதாக வெளியாகும் செய்திகள் பொய்!”- விஷால்
நடிகர் விஷால் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த செய்திகள் அனைத்தும் பொய் என மறுப்பு தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கவிருக்கும் நிலையில், கூட்டணி தொடர்பாக பல கட்சிகள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், பாஜகவில் திரைத்துறையினர், பிரபலங்கள் என பலரும் இணைந்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் விஷால், பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியானது.
மேலும் அவர் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாகவும், அவர் பாஜகவில் இணையப்போவதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், தாம் பாஜகவில் இணையப்போவதாக வெளிவரும் செய்திகள் பொய் என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.