இரவு நேரங்களில் பெண்கள் உள்ளாடைகளை நைட்டி அணிந்து திருடிச்செல்லும் நூதன திருடன்.! அச்சத்தில் குடியிருப்பவாசிகள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கோவை மாவட்டத்தில் மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில் சமீபகாலமாக யாரோ ஒருவர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகள் உட்பட  திருடி ஆளில்லா இடத்தில் போட்டு எரித்துள்ளார்.
  • சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு பார்த்தபோது திருடன் ஒருவன் பெண்கள் அணியும் நைட்டி அணிந்தபடி திருட வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த சைக்கோ திருடனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ளது மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில் 245 வீடுகள் உள்ளன. அது ரயில்பாதையின் அருகில் அமைந்திருக்கும் இந்த குடியிருப்பு பகுதியில் சமீபகாலமாக யாரோ ஒரு நபர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகள் உட்பட  திருடிச் செல்கிறார் என்று, மக்கள் மத்தியில் பரபரப்பும் நிலவியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஓரே நேரத்தில் உள்ளாடைகளும், செருப்பும் காணாமல் போன நிலையில் குடியிருப்பு வாசிகள் அவற்றைத் தேடியுள்ளனர். பின்னர் அதே பகுதியில் உள்ள ஆளில்லாத வீடு ஒன்றில் செருப்புகளும் உள்ளாடைகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் சிசிடிவி கேமரா இருந்ததால், அந்த காட்சிகளை ஆய்வு பார்த்தபோது திருடன் ஒருவன் பெண்கள் அணியும் நைட்டி, சுடிதார் டாப்ஸ் மற்றும் கொலுசுகள் அணிந்தபடி திருட வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்தக் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் துடியலூர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து வீடுகளில் சிசிடிவிக்களை பொருத்தி, சுற்றுச் சுவரை உயர்த்தி அதில் கம்பிகளைப் பொருத்தி பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்னர் அப்பகுதி குடியிருப்பு வாசிகள்.

மேலும், குடியிருப்புவாசிகள் குழுக்களாக பிரிந்து இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளையும் மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் அந்த நூதன திருடன் அதேபோல் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளைத் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. மேலும், திருடிய அனைத்தையும் ஆளில்லா இடத்தில் போட்டு எரித்துள்ளார், இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். பிறகு குடியிருப்பு வாசிகள் ஏற்கனவே கொடுத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துடியலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த சைக்கோ திருடனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

2 minutes ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

31 minutes ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

55 minutes ago

மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

1 hour ago

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

13 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

13 hours ago