டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு.! குரூப் 2 பாடத்திட்டத்தில் மாற்றம்.!

TNPSC Group 2A Exams

குரூப் 2 : டிஎன்பிஎஸ்சி செப்டம்பர் மாதம் நடத்தும் குரூப் 2, 2A தேர்வின் புதிய பாடத்திட்டம் தற்போது அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு துறையில் டிகிரி அளவிலான பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் வாயிலாகவும் அந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வு தேதிகளை கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி TNPSC வெளியிட்டது.  வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெற உள்ளன. மொத்தம் 2030 காலிப்பணியிடங்கள் இதில் நிரப்பப்பட உள்ளன.

செப்டம்பர் இறுதியில் தேர்வு நடைபெற உள்ளதால், இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் இறுதியில் வரவேற்கப்படும். அதற்கு முன்னதாக தற்போது குரூப் 2, 2a தேர்வின் புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.  முன்னதாகவே குரூப் 2, 2Aகளின் முதன்மை தேர்வுகள் தனித்தனியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது வெளியான புதிய படத்திட்டத்தின்படி, குரூப் 2 முதன்மைத் தேர்வில், தமிழ் தகுதி தாளும், பொது அறிவும் விரிவாக விடையளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குரூப் 2A முதன்மைத் தேர்வில், தமிழ் தகுதி தாள் மட்டும் விரிவாக விடை அளிக்கும் வகையிலும், பொதுஅறிவு விருப்பங்கள் அடிப்படையில் விடையை தேர்வு செய்யும் வகையிலும் திருத்தும் செய்யப்பட்டுள்ளது.

பொது அறிவுத்தாளில், 50 சதவிகித வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலான பொது அறிவு சார்ந்தும், 20 சதவிகித வினாக்கள் 10ஆம் வகுப்பு கணித தரத்திலும் , 30 விழுக்காடு வினாக்கள் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் அல்லது பொது தமிழ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் முழுதான விவரங்களை அறிய TNPSC தேர்வுகுழுமத்தின் அதிகாரபூர்வ தளமான tnpsc.gov.in என்ற தளத்தில் தேர்வு எழுதுபவர்கள் அறிந்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்