#Breaking:திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்..! என்னென்ன தளர்வுகள்?

Published by
Edison

திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் குறைக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.இதனை மாவட்ட ஆட்சியர் நேற்று இரவே செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.அதன்படி,

  • பால் ,மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர மளிகைக்கடைகள்,காய்கறிக் கடைகள்,பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட மட்டுமே அனுமதி.
  • திருப்பூர் மாநகரத்தில் அமைந்துள்ள கீழ்கண்ட 33 வணிக பகுதிகள் மற்றும் பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள கீழ்கண்ட வணிக பகுதிகள் ஆகிய பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடைகள் மற்றும் காய்கறிக்கடைகள் மற்றும் உணவுபொருட்கள், இறைச்சி, கோழி, மீன் விற்பனை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இயங்க முழுமையாக தடைவிதிக்கப்படுகிறது.
  • உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50% இருக்கைகளுடன் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி.
  • உணவகங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.
  • மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்கெட் மற்றும் பன்னடுக்கு வணிக வளாகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை.
  • கேரள மற்றும் தமிழ்நாடு எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
  • கேரளாவில் இருந்து திருப்பூர் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுத்த RTPCR கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.இல்லையென்றால் இருதவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
  • மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் கூடாதவாறு அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
  • அனைத்து பூங்காக்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

4 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

6 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

6 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

9 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

9 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

9 hours ago