மக்கள் கருத்தை கேட்ட பிறகே புதிய கல்விக்கொள்கை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது. மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர்.
இதனிடையே புதுச்சேரியில் கொரோனா பாதித்த நோயாளிகளை சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்தும் வகையில் சித்த மருத்துவமனை அமைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புதிய கல்வி கொள்கை புதுச்சரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார்.
புதிய கல்விகொள்கை குறித்து மக்கள் கருத்தை கேட்ட பின்பே நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் புதுச்சேரியில் சமஸ்கிருதம், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…