கொரோனா மரணங்களை விட அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று மின்தடை காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய்கார்த்திகேயன், அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்றதால் 40 நிமிடம் அளவிற்கு மின் துண்டிப்பு ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற நபர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும் மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெறும் வரை சிகிச்சை பெற்று வரக்கூடிய மற்ற நோயாளிகளை தற்காலிகமாக வேறு பகுதிக்கு மாற்றுவது குறித்து சுகாதாரத்துறையிடம் கேட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்துண்டிப்பு ஏற்பட்டதால், ஆக்சிஜன் தடைபட்டு இருவர் உயிர் இழந்திருக்கிறார்கள்.
மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் லட்சணம் இது தான் எனவும், கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட மரணங்கள் தற்பொழுது அதிகரித்துள்ளதாகவும் அதிமுக அரசு மக்களைக் கொல்லும் அரசாக மாறி விட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…