சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ராஜஸ்ரீ( 9). இவர் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். ராஜஸ்ரீ காதில் கம்மல் போடும் இடத்தில் ஒரு சிறிய கட்டி உள்ளது அதனை அகற்ற அரசு உதவிபெறும் மருத்துவமனையான அம்பத்தூர் ஸ்டெட்போர்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்ரீ அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனால் அறுவை சிகிச்சைக்காக நேற்று ராஜஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கான சோதனைகள் முடிந்த நிலையில் இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ராஜஸ்ரீ பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தன. ராஜஸ்ரீ கம்மல் போடும் இடத்தில் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யாமல் அவரது தொண்டையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் சிறுமியின் உறவினர் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
பின்னர் தகவல் அறிந்து போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணைகளில் ஒரு சிறுவனுக்கு செய்யவேண்டிய ட்ரான்சில் கட்டி அறுவை சிகிச்சை மாற்றி சிறுமிக்கு செய்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
பெற்றோர்கள் தரப்பில் தொண்டியில் அறுவை சிகிச்சை செய்து ட்ரான்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் சிறுமிக்கு தொண்டியில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறினர். பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…