நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் ! உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி  மனு தாக்கல்

Published by
Venu
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் மாணவர் உதித் சூர்யா சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உதித்  சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தேனி மருத்துவ கல்லூரிக்கு புகார்  தெரிவிக்கப்பட்டது. பின் மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது நீட் தேர்வு  நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும்,  தற்போதைய புகைப்படமும் ஒன்றாக இல்லாத காரணத்தால் அவர் மீது சந்தேகம் எழுந்தது..இதனால் சந்தேகத்தின் அடைப்படையில் அந்த மாணவர் குறித்த தகவல்களை மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைத்தார் தேனி மருத்துவ கல்லூரியின் டீன் ராஜேந்திரன்.
இதன் பின்னர் அவர் மீது காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் அந்த மாணவன் மனஅழுத்தம் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.மேலும் உதித் சூர்யாவை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர் . நீட் தேர்வில்  ஆள் மாறாட்டம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மாணவர் உதித் சூர்யா சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில், நீட் தேர்வில் 382 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் ,தேசிய அளவில் 6,704-வது இடத்தை பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் தேனி மருத்துவக்கல்லூரியில் தனக்கு இடம் ஒதுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
Published by
Venu

Recent Posts

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

14 minutes ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

59 minutes ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

1 hour ago

விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…

2 hours ago

கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!

கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …

2 hours ago

“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…

3 hours ago