நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த உதித் சூர்யா மற்றும் தேர்வு எழுதிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேர்ந்த மாணவர் உதித் நாராயணன் என்பவர் நீட் தேர்வை கடந்த ஆண்டு மும்பையில் எழுதினார்.அவர் எழுதிய தேர்வில் வெற்றிபெற்றதையடுத்து தேனியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.
இந்தநிலையில் தேனி மருத்துவ கல்லூரியின் டீனுக்கு இ-மெயிலில் புகார் ஓன்று அளிக்கப்பட்டது.அந்த புகாரில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த மாணவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் , சூர்யா நீட் தேர்வு எழுதிய ஹால் டிக்கெட்டில் இருந்த புகைப்படமும்,மாணவர் சேர்க்கைக்காக சேரும் போது எடுத்த புகைப்படமும் வெவ்வேறாக இருந்தது.இதனால் சந்தேகத்தின் அடைப்படையில் அந்த மாணவர் குறித்த தகவல்களை மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைத்தார் தேனி மருத்துவ கல்லூரியின் டீன் ராஜேந்திரன் .மேலும் இது தொடர்பாக தேனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்ததாக தெரிவித்தார் டீன் ராஜேந்திரன்.
தற்போது உதித் மற்றும் தேர்வு எழுதியதாக கூறப்படும் நபர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தேனியில் உள்ள கண்டனூர் காவல் நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…