நீட் விவகாரம் : அதிமுக அரசு நாடகம்- ஸ்டாலின் குற்றச்சாட்டு
- இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
- நீட் விவகாரத்தில் அதிமுக அரசு நாடகம் போடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கியது.பின்னர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் படி இன்று (ஜனவரி 6-ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க
2 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில், அதை ரத்து செய்யக் கோரி அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது நாணமின்றி அரங்கேற்றப்படும் நடுப்பகல் நாடகம்!நீட் மசோதாவுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற முடியாத தோல்வியை மறைக்கவா?#ADMKNEETdrama pic.twitter.com/cgokb6Ia1P
— M.K.Stalin (@mkstalin) January 5, 2020