நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடத்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
தேனி மருத்துவ கல்லூரியின் டீனுக்கு இ-மெயிலில் புகார் ஓன்று அளிக்கப்பட்டது.அந்த புகாரில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. பின் மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது நீட் தேர்வு நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும், தற்போதைய புகைப்படமும் ஒன்றாக இல்லாத காரணத்தால் அவர் மீது சந்தேகம் எழுந்தது.இதன் பின்னர் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.ஆனால் அந்த மாணவன் மன அழுத்தம் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.தனிப்படை போலீசார் சென்னை சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்க மருத்துவ கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சான்றிதழ்கள், புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்த தகவல்களை உடனுக்குடன் மருத்துவ கல்வி இயக்குனரின் மின்னஞ்சலுக்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…