#Breaking:கனமழை எதிரொலி – தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு!

திருவள்ளூர் ,செங்கல்பட்டு,மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில்,கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள்,சாலைகள்,கடைகளுக்குள் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து உள்ளன.இதனால்,பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் ,செங்கல்பட்டு,மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்திலிருந்து மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். அதன்படி, செங்கல்பட்டு,திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா 1 குழுவும்,மதுரைக்கு இரண்டு குழுக்களும் என மொத்தம் 100 வீரர்கள் விரைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025