சட்டத்தின் பெயரை இந்தியில் மாற்றக்கூடாது – ப.சிதம்பரம் பேட்டி
புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஆங்கில மொழி சட்டத்துக்கு இந்தியில் பெயர் மாற்றாமல் ஆங்கில பெயர் வைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் பெயர் வைக்க வேண்டாம் என்று கூறவில்லை, சட்டம் ஆங்கிலத்தில் இருக்கும் போது, பெயரும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்றுள்ளார்.
இந்தியில் மொழிபெயர்ப்பு இருந்தால், இதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல், என்ன பிரிவு என்று நீதிபதிகளே கேட்கும் நிலை தற்போதும் உள்ளது. ஆங்கிலத்தில் சட்டத்தை இயற்றிவிட்டு, பெயரை மட்டும் இந்தியில் வைக்கிறார்கள். மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தில் இந்த சட்டத்தின் பிரிவுகளை ஆங்கிலத்தில் எழுதிய பிறகே இந்தியில் மொழிபெயர்கிறார்கள். நீதிமன்றத்தில் ஆங்கிலம் வடிவம் தான் பெரும் பகுதி பயன்படுத்தப்படுகிறது.
இந்தி பெயரில் உள்ளதை ஆங்கிலத்தில் என சொல் ஆங்கிலத்தில் என்ன பிரிவு என்று நீதிபதிகள் கேட்கிறார்கள். ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதிவிட்டு, பெயர் மட்டும் இந்தியில் வைக்கிறார்கள், அது வாயிலேயே நுழையவில்லை எனவும் கூறினார். மேலும், திமுகவின் உண்ணாவிரத போராட்டம் சாத்தியம், நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பது நியாயம் தான் என செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தார்.