மர்ம நபர்கள் டாஸ்மார்க் கடையில் துளைபோட்டு திருட்டு !!!
நாகர்கோவில் பார்வதிபுரம் நாடாங்குளத்தில் ஒரு டாஸ்மாக் கடை ஓன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடையின் பின்பக்க சுவரை துளைபோட்டு மர்பநபர்கள் கொள்ளை அடித்துள்ளனர். பின்னர் அந்த துளை வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த விலை உயர்ந்த மதுபானங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் அவர்கள் கடையில் இருந்த 63 மதுபாட்டில்களை திருடிச்சென்றுள்ளதாக போலீசார் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. மேலும் அவற்றின் மதிப்பு ரூ.24 ஆயிரம் இருக்கும் என்று விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் 5 முறையாக நிகழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.