போதையில் தாய் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு அழைப்பு கொடுத்து மாட்டிக்கொண்ட கொலைகார மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பாரியூரில் உள்ள நஞ்சாகவுண்டபாளையத்தில் கணவரை இழந்து தனது மகன் கருப்பசாமி உடன் வாழ்ந்து வருபவர் தான் மாகாளி. ஏற்கனவே கணவன் இன்றி வறுமையில் அவதிப்படும் இந்த தாயாரின் மகன் கருப்பசாமி மிகவும் குடித்துவிட்டு அவரது தாயை கொடுமை செய்து வந்துள்ளார். வழக்கமான அவரது மகனின் கொடுமை தங்க முடியாத மாகாளி அவரது சித்தி வீட்டிற்கு சென்று விவாசாய தொழில் சிறிய கூலி தொழில் செய்து வந்துள்ளார்.
நான்கு மாதங்கள் அவர் அங்கு நிம்மதியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தாயை அழைத்துவர மேவேணியில் உள்ள தாயின் சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று தாயை அழைத்ததும் அவர் வர மறுத்ததால், அடித்து ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு கூடி சென்றுள்ளார். இவர் அடித்ததில் தலையில் படுகாயமடைந்த அவரது தாயார் உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு இறந்துவிட்டார் என்றால் சந்தேகப்படுவார்கள் என்ற எண்ணம் கூட கருப்பசாமிக்கு தோன்றவில்லை.
மது போதையில் இருந்ததால் அவராகவே அனைத்து உறவினர்களுக்கும் போன் செய்து தகவல் அளித்துள்ளார். திரண்டு வந்த உறவினர்களில் ஒருவராக வந்த மாகாளியின் சித்தி தனது அக்கா மக்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசார் உடலை பிரேதபரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்பொழுது தலையில் பலத்த காயம் இருப்பதாய் கண்டு கருப்பசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். தவளை தன் வாயால் கேட்டதுபோல அம்மாவை கொண்டுவிட்டு இறந்துவிட்டதாக உடனடி நாடகமாடிய கருப்பசாமியின் மீது அவரது பெரும் கோபத்தில் இருக்கின்றனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…