சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவு…!திருமாவளவன்
ஆத்தூர் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் .திருமாவளவன் கூறுகையில், ஆத்தூர் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவு ஆகும். சிறுமி கொலை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அமைதி காப்பது வேதனை அளிக்கிறது.அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துடன் முதல்வரை சந்திக்க உள்ளேன் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார்.