அடிக்கல் விழாவிற்கு முறையாக அழைப்பு இல்லை – அவமதித்துவிட்டதாக எம்பி குற்றச்சாட்டு.!
தமிழகத்தில் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதைதொடர்ந்து விருதுநகரில் அமைய உள்ள மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.
அதில் விருதுநகரில் புதிய மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு தன்னை முறையாக அழைக்காமல் அவமதித்துவிட்டதாக அம்மாவட்ட எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
Will submit a complaint to Hon’ble @ombirlakota about the insult to MP in which Dr Harsh Vardhan is also part of it ! @CMOTamilNadu it’s shameful act by ur government! People of kamraj soil will not forget it ! pic.twitter.com/MYQSgQWjAG
— Manickam Tagore .B/ மாணிக்கம்தாகூர்.ப (@manickamtagore) March 1, 2020
இன்று மதியம் 12.35 மணிக்கு தான் அழைப்பிதழ் அனுப்பப் பட்டதாகவும் , கடந்த 2010 ஆண்டு முதல் குரல் கொடுத்துவந்த மருத்துவகல்லூரியின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க முடியாததற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்.ஏனென்றால் மதுரையில் இருந்து 11.40 மணிக்கு டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு விட்டேன் என கூறினார்.
எம்.பி ஆன தன்னை அவமதித்ததது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் “மதியாதார் தலைவாசல் மிதியாதே ” என்றும் பதிவிட்டுள்ளார்.