பெண்குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்!
பெண்குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்.
தஞ்சாவூர் மாவட்டம், வளவன்புரத்தை சேர்ந்த சாந்தியின் மகள் துளசி. இவருக்கு 4 வயது மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாத நிலையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில், 2 குழந்தைகளுக்கும், வீட்டில் இருந்த 2 வளர்ப்பு நாய்களுக்கும் விஷம் கொடுத்து கொன்றது தெரிய வந்தது. மேலும், துளசியும் அவரது தாயார் சாந்தியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், போலீசார், 4 பேரின் உடல்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாய்களின் உடலை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த 4 பேரின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.