தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

தாய்மொழி என்பது தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

TN CM MK Stalin

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். மத்திய அரசு மும்மொழி கொள்கை வாயிலாக இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது என்ற குற்றசாட்டு திமுக மட்டுமல்லாது தமிழகத்தில் பரவலாக கூறப்படும் குற்றசாட்டு. இதனை பாஜக மறுத்தாலும், தேசிய கல்விக்கொள்கையின்படி 3வது மொழி படிக்க வைப்பதில் இந்தி மொழியை தவிர வேறு மொழிகளை படிக்க வைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

இந்த மும்மொழி கொள்கை, இந்தி மொழி திணிப்பு குறித்து தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில், “இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் – 9” என ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஆங்கிலத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளர்.

நாங்கள் தேச விரோதிகளா?

அதில்,  “நீங்கள் சலுகைகளுக்கு பழகும்போது, ​​​​சமத்துவம் அடக்குமுறையாக உணர்கிறீர்கள்.” தமிழ் நாட்டில் தமிழுக்கு உரிய இடத்தைக் கோருவதற்காக சில மதவெறியர்கள் எங்களை இனவாதிகள் என்றும் தேசவிரோதிகள் என்றும் முத்திரை குத்தும்போது இந்த மேற்கோள் எனக்கு நினைவுக்கு வருகிறது.

சீன ஆக்கிரமிப்பு, பங்களாதேஷ் விடுதலைப் போர், கார்கில் போரின் போது அதிக நிதி வழங்கிய திமுக மற்றும் அதன் அரசாங்கத்தின் தேசபக்தியைக் கேள்வி கேட்கும் துணிச்சல் கோட்சேவின் சித்தாந்தத்தை கொண்டுள்ள மக்களே. அதே சமயம் அவர்களின் சித்தாந்த முன்னோர் தான் காந்தியை கொன்றவர்.

எது இனவாதம்?

மொழி சமத்துவம் கோருவது இனவாதம் அல்ல. இனவாதம் எப்படி இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறீர்களா? 140 கோடி குடிமக்களையும் ஆளும் மூன்று குற்றவியல் சட்டங்களை தமிழர்களால் உச்சரிக்கவோ, படித்து புரிந்துகொள்ளவோ ​​முடியாத மொழியில் கூறுவதே இனவாதம் ஆகும். தேசிய கல்வி கொள்கை எனும் விஷத்தை விழுங்க மறுப்பதற்காக தேசத்திற்கு அதிகப் பங்களிப்பை வழங்கும் மாநில அரசை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி அதன் நியாயமான பங்கை மறுப்பதே இனவாதம்.

எதையும் திணிக்கும் செயல் பகையை வளர்க்கும் செயலாகும். பகைமை ஒற்றுமையை அச்சுறுத்துகிறது. எனவே, உண்மையான இனவாதிகள் மற்றும் தேசவிரோதிகள் இந்தி வெறியர்கள் தான். ஆனால் எங்கள் எதிர்ப்பை தேசத்துரோகம் என்று அவர்கள் நம்புகிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேலும் அறிக்கை வாயிலாக,  சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம் பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. எனினும், பெரும்பான்மை மொழியான ரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தியது. சோவியத் யூனியன் சிதைவடைந்து பிரிந்ததில் மொழி ஆதிக்கமும் ஒரு காரணமாக அமைந்தது.

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து, கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித்திணிப்பினால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு நம் பக்கத்திலேயே இருக்கிறது.

கிழக்கு வங்காளத்தினர் தங்கள் தாய்மொழியான வங்காளத்தையும் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். போராட்டங்களை நடத்தினர். வங்கதேச விடுதலைக்காக இந்திய இராணுவம் பங்கேற்ற போரின்போது. இந்தியாவிலேயே மிக அதிக நிதியை அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது தலைவர் கலைஞரின் ஆட்சி நடைபெற்ற தமிழ்நாடு.

தாய்மொழியை மதிக்கிறோம்

நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகோதர சகோதரிகள்தான். இந்திய அரசியல் சட்டம் 351-ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டி, இந்தி மொழியை 1945 1980 2025 வளர்க்கும் பொறுப்பை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொள்கிறது. செப்டம்பர் 14-ஆம் தேதியை ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகிறது. அந்த நாளில், இந்தித் திணிப்பு முழக்கங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் முன்வைக்கிறார்கள்.

லட்சியம் நிறைவேறும் வரை கேட்போம்

ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் மத்திய அரசுக்கு தயக்கம் ஏன்? எங்கள் அண்ணா அன்று மாநிலங்களவையில் கேட்டதைத்தான் அவரது தம்பிகளான நாங்களும் கேட்கிறோம். அவரால் பெயர் சூட்டப்பட்ட எங்கள் தமிழ்நாடு கேட்கிறது. இலட்சியம் நிறைவேறும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம் என குறிஐபிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்