இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற தாயாருக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜீவனாம்சம் பெற வேண்டி சரஸ்வதி தொடர்ந்த வழக்கில், ரூ.6.22 லட்சம் வழங்க வேண்டும் என சரஸ்வதியின் கணவர் அண்ணாதுரைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சரஸ்வதி உயிரிழந்த நிலையில், அவரது தாயார் ஜெயா மகளின் வழக்கை தொடர்ந்து நடத்தினார்.
முன்னதாக 1991ஆம் ஆண்டு அண்ணாதுரை மற்றும் சரஸ்வதி தம்பதியினர் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றனர், இதையடுத்து ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என சரஸ்வதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலுவைத்தொகை ரூ.6,22,500-ஐ வழங்கக்கோரிய வழக்கில். அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், வாரிசுரிமை சட்டத்தின் படி, மனைவி இறந்துவிட்டால் அவரது சொத்துகள் குழந்தைகள், பெற்றோருக்கு சேரும் என உத்தரவளித்து, அண்ணாதுரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…