சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!
எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
எத்தியோப்பியாவில் இருந்து இக்பால் பாஷா என்பவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிலையில், அவரிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனையில், ₹100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை சூட்கேஸ் மற்றும் பைகளுக்கு நடுவில் வைத்து மறைத்து கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.