‘திராவிட இயக்கத்தின் தாய் வீடு ஈரோடு’ – ஈரோட்டில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும், புதிய திட்டப் பணிகளையும் காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும், புதிய திட்டப் பணிகளையும் காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். அதன்படி, ரூ.104.81 கோடி மதிப்பிலான 66 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும், ரூ.45.15 கோடியிலான 365 புதிய திட்டப்பணிகளுக்கும் காணொளியில் அடிக்கல் நாட்டினார். 40,093 பயனாளிகளுக்கு ரூ.209.76 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை காணொளி வாயிலாக வழங்கினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், திராவிட இயக்கத்தின் தாய் வீடு ஈரோடு, கொரோனா தொற்று குறைந்த பின் ஈரோட்டிற்கு செல்வேன். விழாக்களை விட மக்களின் உயிர் தான் முக்கியம். இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.