கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை தாரைவார்க்க மோடி அரசு விரும்புகிறது – கே.எஸ்.அழகிரி

Default Image

கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை, ஒரு சில நண்பர்களுக்குத் தாரை வார்க்க மோடி அரசு விரும்புகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுத்துறை நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ள அனைவருடைய சொத்து. பொருளாதார வளர்ச்சிக்கும், சிறு குறு தொழிலுக்கும் ஆணிவேராக இருப்பது பொதுத்துறை நிறுவனங்கள் தான் .எனவே பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது என்றும் இம்முடிவை கைவிட கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை, ஒரு சில நண்பர்களுக்குத் தாரை வார்க்க மோடி அரசு விரும்புகிறது. விற்கப்படும் சொத்துகள் 30 முதல் 50 ஆண்டுகள் கழித்து அரசுக்குத் திரும்பி வரும்போது, அவற்றின் மதிப்பு பூஜ்ஜியமாகிவிடும்.

பாதுகாப்பு, ரயில்வே போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளை விற்பதற்குக் காங்கிரஸ் ஒருபோதும் முயன்றதில்லை. இந்த துறைகளைத் தனியார் ஏகபோகத்துக்கு விட்டால், அது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்