ஐஐடி கொண்டு வந்த நவீன கருவி கிணற்றில் செலுத்தப்பட்டது..!
ஐஐடி கொண்டுவந்த நவீன சாதனம் மூலம் குழந்தையை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். ஐஐடி கொண்டுவந்து நவீன கருவியை ஆழ் துளை கிணற்றில் செலுத்தி உள்ளனர். இந்த கருவி 15 கிலோ எடை கொண்டது. இந்த சாதனம் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியும்.இதில் கேமரா , மைக் உள்ளதால் குழந்தையிடம் பேச முடியும்.
இந்த கருவி வெங்கடேஷ் தலைமையிலான குழு தயாரித்தது.இந்த கருவிக்கு 2013-ம் ஆண்டு அங்கீகாரம் வழங்கியது.ஆழ் துளை கிணற்றில் செலுத்திய கருவி மூலம் குழந்தையை தூக்க முடியும் என அதிகாரிகள் எதிர்பார்கின்றனர்.