தென் மாவட்ட வெப்பத்தை தணித்த மிதமான மழை.! விவசாயிகள் மகிழ்ச்சி.!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை சற்று உயர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாகி இருக்கும் வேளையில் நேற்று தென் தமிழகத்திலும், மேற்கு தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது .
திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்தது.
திண்டுக்கல் கொடைக்கானல் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்களும், பயிர் விதைத்த விவசாயிகளும் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை மேலூர் பகுதியில் 2 நாள்களாக அங்கங்கே லேசான மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியிலும் மிதமான மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன், கோட்டைமேடு பகுதியிலும் நேற்று மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியிலும் மிதமான மழை பெய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதியிலும் மிதமான மழைபெய்ததால் வெயிலின் தாக்கத்தால் தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல விதை விதைத்துள்ள விவசாயிகளும் சற்று நிம்மதி அடைந்துள்ளானார். இன்னும் சில நாட்கள் இதே போல மழை பெய்ய வேண்டும் காத்திருக்கின்றனர்.