சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. அதிமுக – திமுக இடையே எப்போதும் வழக்கம்போல நேரடி போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, ரஜினியும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த சட்டமன்ற தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் மதுரையில் கமல்ஹாசன் தனது முதல் பிரச்சாரத்தை இன்று தொடங்கி வைத்தார். அங்கு அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் கூடியது. இதுகுறித்து கமல்ஹாசன் பதிவில், அதில், காசுக்காகக் கூடுவது கும்பல், லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி. மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…