தனது சொந்த செலவில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் தனது சொந்த பணத்தில் 25 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி, அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது தான் இந்த பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் சில மாவட்டங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக தான் காணப்படுகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பழனி அரசு மருத்துவமனைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் தனது சொந்த பணத்தில் 25 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி, அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளார். அதன்படி, பழனி அரசு மருத்துவமனைக்கு 15 இயந்திரங்களும், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு 10 இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது.