அமைச்சர் கருப்பணனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – ஆளுநரிடம் திமுக புகார்
- உள்ளாட்சியில் திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படும் என்று
- இவ்வாறு பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில், அமைச்சர் கருப்பணன் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில்,, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்ற ஒன்றியங்களுக்கு அரசு குறைவான நிதியே ஒதுக்கும் என்று பேசினார்.அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திமுக பொருளாளர் துரைமுருகன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த மனுவில்,ஆட்சியின் மரபை மீறி அமைச்சர் கருப்பணன் பேசியுள்ளார் . உள்ளாட்சியில் திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படும் என்று அவர் பேசியுள்ளார். அமைச்சர் கருப்பணன் மரபை மீறி பேசியுள்ளார்.எனவே தமிழக அமைச்சரவையில் இருந்து கருப்பணனை உடனடியாக நீக்க வேண்டும்.இதற்கான நடவடிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனே எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் கருப்பணன் பேசிய ஊடக ஆதாரங்களையும் இணைத்து அனுப்பியுள்ளார்.