வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
டெல்லி, ஹரியானா, இமாச்சல் பிரதேஷ், உத்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து காஷ்மீர் பகுதியில் அமர்நாத் யாத்திரை சென்றவர்கள், இமாச்சல பிரதேசத்தில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், அதில், வடமாநிலங்களில் பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்க அந்தந்த மாநில பேரிடர் மேலாண்மை துறையிடம் கேட்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹிமாச்சல் பிரதேஷில் சிக்கிய மாணவர்கள் பத்திரமாக இருப்பதை அம்மாநில பேரிடர் மேலாண்மை குழு மூலம் உறுதி செய்துள்ளோம் எனவும், அமர்நாத் யாத்திரைக்கு சென்று பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…