ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.! அமைச்சர் சக்கரபாணி தகவல்.!
22% சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது. என அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது பருவமழைக்கு முன்பே பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் மழை பெய்து வந்த காரணத்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்.
அவர்கள் அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியவில்லை. இதனால் அரசு கொள்முதல் நிலையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 17 சதவீத ஈரப்பதம் இல்லாத காரணத்தால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மாறுகிறது என்ற குற்றசாட்டுகள் எழுந்தன.
இதனை அடுத்து, தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் 2021 நவம்பரில் மத்திய அரசு 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்குவதை தளர்த்தி 19 சதவீதம் வரையில் ஈரப்பதத்தில் இருக்கும் நெல்லை கொள்முதல் செய்யும் வண்ணம் விதிகள் மாற்றப்பட்டது.
மேலும், உடைந்த வண்ணம், மங்கிய, முளைத்த பூச்சி அரித்த நெல்லின் அளவானது நான்கு சதவீதமாக இருக்கலாம் எனவும், விளையாத சுருங்கிய நெல்லின் அளவு 3% ஆக இருந்ததை நான்கு சதவீதம் வரை இருக்கலாம் எனவும்அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதனை தளர்த்தி குறிப்பாக 22% சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவும்,
இதற்கான ஒப்புதல் பெறுவதற்காக தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி செல்ல உள்ளார் எனவும், சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.