மக்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகம் வந்த மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, வேலூர் வாலாஜாபாத் அருகே உள்ள விசி மோட்டூரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பெங்களூரு மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விரைவில் தொடங்கும் என கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், மக்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. பசுவின் சானத்திலிருந்து பெயிண்ட் தயாரிப்பது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்று விவசாயிகளிடமிருந்து பெறப்படும் வேளாண் பொருட்களிலிருந்து எரிபொருள் தயாரிப்பது உள்ளிட்ட மாற்று வழிகளை ஏற்படுத்த அரசுகள் முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், விவாயிகள் டிராக்டருக்கு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கலாம் என்றும் விலை அதிகரித்து வரக்கூடிய நிலையில், மக்கள் மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும் என்பதே தன்னுடைய அறிவுரை எனவும் தெரிவித்துள்ளார். பாஸ்டேக் வாங்க கொடுக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது. இனியும் அவகாசம் நீட்டிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.
சேலம் – சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக, இன்று மாலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தவுள்ளார் என்றும் இதன்பின் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொள்வார் எனவும் தகவலும் வெளியாகியுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…