மாண்டஸ் புயல் மிச்ச பகுதி.. கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யும் எனவும், சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.
வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை தென்கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், அது இந்திய பெருங்கடல் பகுதி பக்கம் செல்வதால் இங்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும், அதன் மிச்சம் இன்னும் இருக்கிறது என்பதால், தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யும் எனவும், சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும் எனவும் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.
அடுத்த 5 நாட்களுக்கு பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் தமிழகத்தில் இருக்காது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.