தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,பல்வேறு பகுதிகள் தொடர் மழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் 1000 மிமி அளவு மழை பதிவாகியுள்ளது.மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு,உருவான பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக,தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்,நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை தொடரும் என்றும்,நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கன மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…