நிவர் புயலின் மையப் பகுதி மட்டுமே 150 கிலோ மீட்டர் விட்டம் கொண்டுள்ளது – வானிலை ஆய்வு மையம்
நிவர் புயலின் மையப் பகுதி மட்டுமே 150 கிலோ மீட்டர் விட்டம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க உள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதன் படி, நிவர் புயல் நகர்ந்து வரும் பாதையில் எந்த மாற்றமும் இல்லை புதுச்சேரி அருகே இன்று இரவு 8 மணிக்கு பிறகு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், நிவர் புயலின் மையப் பகுதி மட்டுமே 150 கிலோ மீட்டர் விட்டம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்தர் விளக்கம் அளித்துள்ளார்.