தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி,விழுப்புரம் ,சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும்,
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…