தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மத்திய அரசை திரும்பி பார்க்க வைத்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமின் வெற்றி மத்திய அரசை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், தனியார் அமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மழைக்காலங்களில் தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என தவறான வதந்தி காரணமாக கடந்த தடுப்பூசி முகாமில் குறைவான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
மேலும், வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள 5-வது மெகா தடுப்பூசி முகாமில் 30,000 தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முறை அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என்றும், தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமின் வெற்றி மத்திய அரசை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.