இன்று துவங்குகிறது காவிரி ஒழுங்குமுறை ஆணைய குழுவின் கூட்டம்… சம்பா சாகுபடிக்கு நீர் கிடைக்குமா….
தமிழகம்,கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களுக்கான காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம்,இன்று தலைநகர் தில்லியில், ‘காணொளி காட்சி’ வாயிலாக நடத்தப்படுகிறது.
தமிழகத்திற்கு காவிரி நீர் முறையாக கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவினர், மாதந்தோறும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ சாகுபடி காலம் துவங்கியுள்ளதால் கர்நாடகாவில் இருந்து, காவிரி நீரை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், இன்று டில்லியில், காணொளி காட்சி வாயிலாக நடக்கிறது. மத்திய நீர்வளஆணைய தலைமை பொறியாளரும், குழுவின் தலைவருமான நவீன் தலைமையில், இக்கூட்டம் நடக்கவுள்ளது. தமிழகம் தரப்பில், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.