மலைகிராம கர்ப்பிணிக்கு அம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்..!
மலைகிராம கர்ப்பிணிக்கு அம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சங்கருக்கு குவியும் பாராட்டு.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள விளாங்கோம்பை மலை கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஜோதி. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் டிஎன் பாளையத்திலிருந்து 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்.
அப்போது ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் வனப்பகுதியில் காட்டாறுகளை கடந்து வரும் வழியில் அவருக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது இந்த நிலையில், பிரசவ வலியால் துடித்த ஜோதிக்கு மருத்துவ உதவியாளர் சங்கர் அங்கேயே பிரசவம் பார்த்துள்ளார்.
இந்த நிலையில், அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில் கோபி அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.