அத்திவரதரின் உள்ளங்கையில் உள்ள “மா.சு.ச” பொருள் தெரியுமா ?
அத்திவரதர் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அத்திவரதர் சிலை பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த 1-ம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டு சயன கோலத்தில் 31 நாள்கள் காட்சியளித்தார்.
நேற்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரின் வலது உள்ளங்கையில் “மா.சு.ச” என்ற எழுத்தை வைத்து உள்ளனர். சயன கோலத்தில் அத்திவரதர் காட்சியளித்த போது பக்தர்கள் “மா.சு.ச” என்ற எழுத்துகள் சரியாக தெரியாமல் இருந்து தற்போது அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பதால் “மா.சு.ச” எழுத்துகளை கண்டு வழிபட்டு வருகின்றனர்.
பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு கண்ணன் உபதேசத்தின் சுருக்கமே அத்திவரதர் வலது உள்ளங்கையில் உள்ள “மா.சு.ச” குறிப்பிடுவதாக கூறுகின்றனர் கோவில் பட்டர்கள்.மேலும் “அபாயத்தில் உள்ளவர்களுக்கு அபயம் அளிப்பேன்” என்பது பொருள்.