ஆளுநர் தமிழிசைக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவகாரம் – மாணவி சோபியா மீது பதியப்பட்ட வழக்கு ரத்து..!
2018-ல் பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜகவுக்கு எதிராக விமானத்தில் கோஷம் எழுப்பியதாக மாணவி சோபியா மீது ஆஆ மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் தன் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில், மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி தனபால் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல்துறைக்கான சட்டப்பிரிவை தூத்துக்குடி போலீசார் பயன்படுத்தி உள்ளனர். இதுபோன்ற சட்டப்பிரிவுகளை சென்னை, கோவை போன்ற காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது.
சென்னை காவல்துறை சட்டப்பிரிவை தூத்துக்குடி போலீசார் பயன்படுத்த அதிகாரம் இல்லை என தனது வாதத்தை முன்வைத்த நிலையில், அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.