எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்.! சட்டப்பேரவையில் கடும் அமளி.!
1988, 1989 இல் நடந்தமாதிரி இன்றைய சட்டப்பேரவையில் நடக்காது. இந்தி திணிப்பு மசோதவை கண்டு பயந்து விட்டீர்கள். யாருக்காகவோ கட்டுப்பட்டு இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்ற நோக்கத்தோடு அமளியில் ஈடுபடுகிறீர்கள். – என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய பேரவையை புறக்கணித்த இபிஎஸ் தரப்பினர், இன்று, எதிர்கட்சி தலைவரான இபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வந்துள்ளார். அதே போல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் வந்துள்ளனர்.
இபிஎஸ் தரப்பினர் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க கோரி தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த சபாநாயகர் அப்பாவு அவர்களுடன் கடுமையான பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகிறார்.
சபாநாயகர் அப்பாவு கூறியதவாது, ‘ பேரவை விதிப்படி, ஒரு கோரிக்கை ஒரு மனதாக முடிவு செய்யாமல் இருப்பின் முதல் ஒருமணி நேரம் கேள்வி நேரம் விதிக்கப்பட்டு அதில் சந்தேகங்கள் கேட்கலாம் என நீங்களும் தானே விதிகளை அமல்படுத்தினீர்கள். அதனை நீங்களே மீறலாமா.? எதிர்க்கட்சி தலைவரை அன்போடு கேட்டு கொள்கிறோம். கேள்வி நேரத்தை வீணடிக்காதீர்கள்.’ என கேட்டுக்கொண்டார். ‘ என கூறினார்.
மேலும் குறிப்பிடுகையில், ‘ நான் நினைப்பது சரிதான். அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்வதற்கு தான் நீங்கள் வந்துள்ளீர்கள். மக்கள் பிரச்னையை பேச மறுக்கிறீர்கள். 88,89 இல் நடந்தமாதிரி இன்றைய சட்டப்பேரவையில் நடக்காது. இந்தி திணிப்பு மசோதவை கண்டு பயந்து விட்டீர்கள். நீங்கள் பேசுவது ஏதும் இன்றைய அவைகுறிப்பில் பதிவேற்றப்படாது. ‘ என சபாநாயகர் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடுகையில், ‘ 1989 இல் சட்டப்பேரவையில் கலைஞர் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கலகம் செய்தீர்கள். இந்தி திணிப்புக்கு எதிராக வரும் தீர்மானம் இன்று வருவதை தெரிந்து கொண்டு யாருக்காகவோ கட்டுப்பட்டு அந்த தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்ற நோக்கத்தோடு இந்த அமளியில் ஈடுபடுகிறீர்கள். ‘ என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்தும் தங்கள் கோரிக்கையினை இபிஎஸ் தரப்பினர் கூறிக்கொண்டு தொடர் அமளியில் ஈடுபட்டனர்.