நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அனுமதியுடன் நடைபெற்ற திருமணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு, வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் அதே கிராமத்தை சேர்ந்த ராம்கி என்ற இளைஞரை காதலித்துள்ளார். இந்த இளைஞர் கஸ்தூரியை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில் காவல்துறையினர் ராம்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் திருமணம் செய்ய மறுத்ததால் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் கஸ்தூரியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பிணை பெற்று வெளியே வந்த நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாததால் அவர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை உயர் நீதிமன்றம் வரை சென்று இவருக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்த ராம்கி தனது காதலியை திருமணம் செய்து கொள்வதாக நீதிபதியிடம் உறுதியளித்தார். அதன்பின் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அப்துல் காதர் அனுமதியுடன் வழக்கறிஞர்களும் முன்னிலையில் விநாயகர் கோவிலில் ராம்கி மற்றும் கஸ்தூரிக்கு திருமணம் நடைபெற்றது.
ராம்கி திருமணம் செய்து கொண்டாலும், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து மதுரை உயர் நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…