மாணவர்களின் திறனை மேம்படுத்தும்10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிப்பு.
இந்தாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கூறுகையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல் 500 மதிப்பெண்களுக்கே கணக்கீடு செய்யப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல. தொழிற்கல்வி பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், பொதுத்தேர்வில் மதிப்பெண்ணில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்களின் திறனை மேம்படுத்தும் 10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தொழிற்கல்வி அறிவிக்கப்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தையும் அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.
இதுவரை பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல் மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கும் கூடுதலாக தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கு இதுவரை தொழிற்கல்வி பாடமும் அதற்கான தேர்வும் கிடையாது.
இந்த நிலையில், மாணவர்களின் திறனை மேம்படுத்தும்10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…